தஞ்சாவூர்

வலங்கைமான் கோயில் விழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

DIN

வலங்கைமான் மாரியம்மன் கோயில் பங்குனிப் பெருந்திருவிழாவையொட்டி,  மார்ச் 23,  24,  30,  31ஆம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (கும்பகோணம்) அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வலங்கைமான் மாரியம்மன் கோயில் பங்குனிப் பெருந்திருவிழா மார்ச் 24-ம் தேதியும், பல்லக்கு திருவிழா மார்ச் 31-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இக்கழகம் மார்ச் 23-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையும், மார்ச் 30 முதல் 31-ம் தேதி வரையும் வலங்கைமானுக்கு விழாப் பேருந்துகளை இரவு, பகல் முழுவதும் இயக்கவுள்ளது. 
இப்பேருந்துகள் கும்பகோணம் - வலங்கைமான், நீடாமங்கலம் - வலங்கைமான், தஞ்சாவூர் - வலங்கைமான், குடவாசல் - வலங்கைமான், பாபநாசம் - வலங்கைமான், மன்னார்குடி - வலங்கைமான் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT