தஞ்சாவூர்

கார் கவிழ்ந்து பல்கலை.  மாணவி சாவு: 3 பேர் காயம்

DIN

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே வெள்ளிக்கிழமை காலை கார் கவிழ்ந்ததில் தனியார் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார்.
திருச்சியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி வெள்ளிக்கிழமை காலை கார் வந்து கொண்டிருந்தது. செங்கிப்பட்டி அருகே திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கண் பாலம் பகுதியில் வந்தபோது கார் டயர் வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது. 
இதில், காரில் பயணம் செய்த தஞ்சாவூர் அருகேயுள்ள தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மின்னணு தொடர்பியல் பொறியியல் பட்டப்படிப்பில் நான்காமாண்டு படித்து வந்த திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரியைச் சேர்ந்த சீனிவாசனின் மகள் ரம்யா (21) வெளியே தூக்கி வீசப்பட்டார். அப்போது, அவரது ஆடை அந்த வழியாக வந்த மற்றொரு அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கிக் கொண்டு இழுத்துச் சென்றது. இதனால், பலத்தக் காயமடைந்த ரம்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும்,  காரில் வந்த அதே பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வரும் சென்னையைச் சேர்ந்த நித்யா (21), சூர்யா (21), சட்டவியல் பட்டப்படிப்பு படிக்கும் செளமியா (21) ஆகியோர் பலத்தக் காயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
இதுகுறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விபத்தில் சிக்கிய மாணவர்கள் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வாடகை வீட்டிலும்,  மாணவிகள் தனியார் விடுதியிலும் தங்கிப் படித்து வருகின்றனர். மாணவர்களுடன் தங்கி அதே பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வரும் கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த அரவிந்த் (21) வெள்ளிக்கிழமை அதிகாலை ஊருக்குச் சென்றார். இவரை திருச்சி ரயில் நிலையத்துக்கு சக மாணவர்களான சூர்யா, பரத் (21), நித்யா, ரம்யா ஆகியோர் காரில் அழைத்து சென்று விட்டுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இவர்களில் பரத் காயமின்றி தப்பினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT