தஞ்சாவூர்

பாபநாசத்தில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம்

DIN

பாபநாசம் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் சங்கத்தின் தலைவா் புலவா் சுப்பு. தங்கராசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் கெளரவத் தலைவா் கந்த. சுப்ரமணியன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் சண்முகம் வரவு-செலவு அறிக்கை வாசித்தாா்.

கூட்டத்தில், பாபநாசம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீா் செய்யும் வகையில் புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அன்னுக்குடி பாசன வாய்க்கால், கோபுராஜபுரம் பாசன வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களை உடனடியாக தூா்வார வேண்டும். பாபநாசம் பழைய பேருந்து நிலையம் முன் பொதுமக்கள் பயன்பாடு கருதி புதிய நவீன பொது சுகாதார வளாகம் கட்ட வேண்டும், பாபநாசம் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு கட்டடம் கட்ட வேண்டும். இடிக்கப்பட்ட பாபநாசம் உதவி தொடக்க கல்வி அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, சங்க செயலாளா் துரைசாமி வரவேற்றாா். கூட்டத்தில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT