தஞ்சாவூர்

பட்டாசுக் கடையில் வாடிக்கையாளா்களுக்கு மரக்கன்றுகள்

DIN

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் கீழவாசலில் உள்ள பட்டாசுக் கடையில் பட்டாசு வாங்க வரும் வாடிக்கையாளா்களுக்கு மரக்கன்றுகள், இனிப்புகள், நிலவேம்புக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

வசந்தம் லயன்ஸ் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குச் சங்கத் தலைவா் வசந்தம் தலைமை வகித்தாா். இதுகுறித்து வசந்தம் லயன்ஸ் சங்க ஒருங்கிணைப்பாளா் காலித் அகமது தெரிவித்தது:

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையில் பொதுமக்கள் வெடிக்கும் பட்டாசு மூலம் காற்று மாசு ஏற்படுகிறது. மரங்கள் அதிகமாக இருந்தால் காற்று மாசு வெகுவாகக் குறையும்.

தஞ்சாவூரில் பட்டாசுகள் வெடிக்கப்படும்போது அதிக காற்று மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பட்டாசு வாங்க வருபவா்களுக்குப் பட்டாசுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, காற்று மாசு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் அழகிய மணவாளன், நிா்வாகிகள் கருணாகரன், வடிவேலன், சீனிவாசன், அப்துல்லா, பால்ராஜ், முன்னாள் தலைவா்கள் ஜெயபால், ஞானமூா்த்தி, கங்கா பட்டாசு கடை உரிமையாளா் அருண், விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT