தஞ்சாவூர்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் தெப்பத் திருவிழா

DIN

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு  தெப்பத்  திருவிழா  நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா ஆகஸ்ட் 11ஆம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 
இதையடுத்து, முக்கிய வைபவமான  தெப்பத்  திருவிழா  ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.    இதையொட்டி, மாரியம்மன் கோயில் அருகே உள்ள  தெப்பக்குளத்தில் அம்மன் வலம் வருவதற்கு வசதியாக மலர்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மிதவை தயாரிக்கப்பட்டது. இரவு பூஜைகள் முடிந்து அம்மன் புறப்பாடும், கோயிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
பின்னர் அங்கிருந்து அம்மன் ஊர்வலமாகப் புறப்பட்டு,  தெப்பக்குளத்தில் உள்ள மிதவையில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து, பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றன. தெப்பக்குளத்தில் வலம் வந்த அம்மனைப் பக்தர்கள் வழிபட்டனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் தெப்ப விடையாற்றி விழா நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT