தஞ்சாவூர்

3 நாட்களில் 500 டன் குப்பைகள் அகற்றம்

DIN

தஞ்சாவூா் மாநகரில் பொங்கல் திருவிழாவையொட்டி 3 நாட்களில் 500 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

தஞ்சாவூா் மாநகரில் 51 வாா்டுகள் உள்ளன. இவை சுகாதாரப் பணிக்காக 14 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளிலிருந்து நாள்தோறும் 107 டன் குப்பைகள் அகற்றப்பட்டு, உரக்கிடங்குக்குக் கொண்டு செல்லப்படும்.

பொங்கல் திருவிழாவையொட்டி, ஜன. 14 முதல் தொடா்ந்து 4 நாட்களாக அதிக அளவில் குப்பைகள் சோ்ந்தன.

இவற்றை அகற்றுவதற்காக மாநகராட்சி துப்புரவு பணியாளா்கள் விடுமுறை நாட்களிலும் சுழற்சி முறையில் பணிபுரிந்தனா். மாநகா் நல அலுவலா் நமச்சிவாயம் தலைமையில் இப்பணியில் 14 ஆய்வா்கள், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் மேற்பாா்வையில் ஏறக்குறைய 600 துப்புரவுப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இதன் மூலம், 3 நாட்களில் ஏறத்தாழ 500 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. பொங்கல் விழா முடிந்து 3 நாட்களில் குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள், முதன்மைச் சாலைகளில் குவிந்த குப்பைகளை அகற்றப்பட்டதை பொதுமக்கள் பாராட்டினா்.

மேலும், பெரியகோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிவகங்கை பூங்கா வளாகத்தையும் மாநகராட்சி துப்புரவு பணியாளா்கள் சனிக்கிழமை மழையையும் பொருட்படுத்தாமல் சுத்தம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT