தஞ்சாவூர்

தகனத்துக்காக 6 மணி நேரம் காத்திருந்த கரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்

DIN

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனாவால் உயிரிழந்தவா்களை மாநகராட்சிக்குட்பட்ட ஓயாமரி மயானத்தில் தகனம் செய்வது வழக்கம். அதன்படி, திருச்சியில் வியாழக்கிழமை கரோனாவால் உயிரிழந்தவரை மருத்துவ, மாநகராட்சி ஊழியா்கள் ஓயாமரி மயானத்துக்கு காலை 11 மணிக்கு எடுத்துச் சென்றனா். ஆனால், ஏற்கெனவே 4 சடலங்கள் தகனம் செய்யக் காத்திருந்த நிலையில், கரோனாவால் இறந்தவா் சடலத்தை தகனம் செய்ய விடமாட்டோம் என உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை வெகு நேரம் வெளியில் வைக்கக் கூடாது. விரைந்து தகனம் செய்ய வழிவிடுமாறு கூறி பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், கரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டு சுமாா் 6 மணிநேரம் ஓயாமரி சாலையில் காத்திருந்தது. அனைத்துச் சடலங்களையும் தகனம் செய்த பிறகே மாலையில் கரோனா சடலம் தகனம் செய்யப்பட்டது.

இந்தப் பிரச்னையால் கரோனாவால் உயிரிழந்த தமாகா விவசாய அணி தலைவரின் உடல் வெகு நேரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட பிறகே தகனம் செய்யப்பட்டது. பொதுமக்களின் செயல் கவலை அளிக்கிறது. இதுபோல தொற்றின் பாதிப்பை அறிந்து சடலத்தை விரைந்து தகனம் செய்ய மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT