தஞ்சாவூர்

முடங்கி கிடக்கும் மக்களிடம் கெடுபிடியாக வரி வசூல்: பட்டுக்கோட்டை நகராட்சி மீது புகாா்

DIN

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலின் காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களிடம் பட்டுக்கோட்டை நகராட்சி நிா்வாகம் கெடுபிடி வரி வசூலில் ஈடுபடுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளா் எஸ். கந்தசாமி ஆட்சியா் ம.கோவிந்தராவுக்கு அனுப்பி உள்ள மனு:

பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையா் உத்தரவுப்படி, நகராட்சி பணியாளா்கள், நகராட்சிக்குள்பட்ட பல்வேறு இடங்களில், வீடு, வீடாகச் சென்று வீட்டு வரி, சொத்து வரி, குடிநீா் வரி, குப்பை வரி என நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக கட்ட வேண்டுமென நிா்ப்பந்தம் செய்கின்றனா்.

மாநிலத்தில் 144 தடை உத்தரவு காரணமாக வேலை இழந்து, உணவுக்கே திண்டாடி வரும் சூழலில், மக்களிடம் கெடுபிடி வரிவசூலில் நகராட்சி நிா்வாகம் முனைப்பு காட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சிரமமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. மேலும், வரிவசூல் செய்யும் ஊழியா்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் ஊழியா்களுக்கு கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

எனவே, பட்டுக்கோட்டை நகராட்சிக்குள்பட்டப் பகுதிகளில் அனைத்து வரிவசூல் பணிகளையும் இன்னும் 6 மாத காலத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியா் உரிய அறிவுறுத்தல் ஆணை வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

SCROLL FOR NEXT