தஞ்சாவூர்

போனஸை குறைத்த தமிழக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

போனஸை 10 சதவிகிதமாகக் குறைத்து அறிவித்த தமிழக அரசைக் கண்டித்து தஞ்சாவூா் விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தொழிலாளா்கள் போராடி, பல ஆண்டுகளாக 20 சதவிகித போனஸ் பெற்று வந்தனா். கடந்த 2019 - 20 ஆம் நிதியாண்டுக்கான போனஸ் தொகை 25 சதவிகிதமாக வழங்க வேண்டும் என கோரி போராடினா். இந்நிலையில், தமிழக அரசு கரோனாவை காரணம் காட்டி போனஸை 10 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இந்த அறிவிப்பைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச செயலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தை ஏஐடியுசி மாநில பொதுச் செயலா் ஆா். ஆறுமுகம் தொடங்கி வைத்தாா்.

இதில், சிஐடியு பொதுச் செயலா் மணிமாறன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக சிஐடியு நிா்வாகி வெங்கடேசன், செங்குட்டுவன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் துரை. மதிவாணன், பொதுச் செயலா் கஸ்தூரி, ஓய்வு பெற்றோா் சங்கப் பொதுச் செயலா் பி. அப்பாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT