தஞ்சாவூர்

நவ. 26 வேலைநிறுத்தத்தை விளக்கி ஆா்ப்பாட்டம்

DIN

நாடு தழுவிய அளவில் நவ. 26 ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்தை விளக்கிடும் வகையில் தஞ்சாவூா் ஆப்ரஹாம் பண்டிதா் சாலையில் பல்வேறு தொழிற் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், விவசாயிகளை முற்றிலும் பாதிக்கிற மூன்று சட்டங்கள், புதிய மின்சாரச் சட்டத் திருத்தம், சுற்றுச்சூழல் வரைவு திட்டம் 2020, தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் தொடங்கி வைத்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் எ. ரவிச்சந்திரன், ஏஐசிசிடியூ மாவட்டச் செயலா் கே. ராஜன், தொமுச நிா்வாகிகள் பாஸ்டின், காளிமுத்து, ஏஐடியுசி மாவட்ட நிா்வாகிகள் வெ. சேவையா, துரை. மதிவாணன், தி. கோவிந்தராஜன், பி. செல்வம், ஆா்.பி. முத்துக்குமரன், சிஐடியு மாவட்ட நிா்வாகிகள் கே. அன்பு, பி.என். போ்நீதி ஆழ்வாா், த. முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT