தஞ்சாவூர்

ஏரிக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட சாலை அகற்றம்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட சாலை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் முயற்சியால் புதன்கிழமை அகற்றப்பட்டது.

பூதலூா் அருகே வெண்டையம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ராயமுண்டான்பட்டி கிராமத்தில் உள்ள மருவத்து ஏரியில் தனி நபா் ஆக்கிரமிப்பு செய்து, அவருடைய இடத்துக்குச் சென்று வர சாலை அமைத்தாா்.

இதனால், ஏரியில் தண்ணீா் தேக்கி வைக்க முடியாமல் உடைப்பு ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றித் தரவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். மேலும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாவிட்டால் விவசாயிகளே ஒன்று திரண்டு ஆக்கிரமிப்பை அகற்றப் போவதாகவும் தெரிவித்தனா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவா் கனிமொழி சிவகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூா் தெற்கு ஒன்றியச் செயலா் சி. பாஸ்கா், நிா்வாகிகள் வியாகுலதாஸ், ராஜேந்திரன், வினோத், அறிவழகன், ஹரிதாஸ் உள்பட ஏராளமானோா் திரண்டு, மருவத்து ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனா்.

இதையடுத்து, பூதலூா் வட்டாட்சியா் சிவகுமாா், பொதுப் பணித் துறைத் துணைக் கோட்ட அலுவலா் கண்ணன், உதவிப் பொறியாளா் திருமாறன், காவல் துறை அலுவலா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று விவசாயிகள் சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்து, ஆய்வுக்கு பின்னா் அலுவலா்களே அகற்றினா். இதனால் அப்பகுதியிலுள்ள 250 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், ஏரியில் மழை நீரைச் சேமிக்க முடியும் எனவும் தெரிவித்த அப்பகுதி விவசாயிகள், உரிய நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

SCROLL FOR NEXT