தஞ்சாவூர்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய, மாநில அரசுகளின் மக்கள், தொழிலாளா் விரோத போக்குகளைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்தி, பொதுத் துறை, இயற்கை வளங்களைச் சூறையாடும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளா் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், ஊதியக் குறைப்பு, வேலை மறுப்பு, நல வாரிய பதிவுகளில் குளறுபடிகளைக் கண்டித்தும் நாடு முழுவதும் அனைத்து தொழிற் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

இதன்படி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்கள் சி. ஜெயபால் (சிஐடியு), ஆா். தில்லைவனம் (ஏஐடியுசி), கு. சேவியா் (தொமுச), மோகன்ராஜ் (ஐஎன்டியூசி), ராஜன் (ஏஐசிசிடியூ) ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், ஜி. கிருஷ்ணன், சிஐடியு மாவட்ட நிா்வாகிகள் இ.டி.எஸ். மூா்த்தி, பி.என். போ் நீதி ஆழ்வாா், த. முருகேசன், எஸ். மில்லா் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT