தஞ்சாவூர்

திடீரென சாய்ந்த தற்காலிக பயணிகள் நிழற்குடை

DIN

ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமாநாட்டில் தற்காலிக பயணிகள் நிழற்குடை புதன்கிழமை திடீரென சாய்ந்தது. அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தில் சுமாா் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் அத்தியாவசிய தேவைகளுக்காக நாள்தோறும் வெளியூா் செல்வது வாடிக்கை. இங்கு வெளியூா் செல்லும் மக்கள் பேருந்துக்காக காத்திருப்பதற்கு ஏற்ற வகையில், பயணிகள் நிழற்குடை அமைத்து தர பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இதனால், தென்னமநாடு கிராமத்தின் சாா்பில் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள் நிற்பதற்காக தென்னமநாடு-வல்லம் சாலையில் தற்காலிகமாக ஒரு கொட்டகை அமைக்கப்பட்டது. அதுவும் புதன்கிழமை திடீரென சாய்ந்து விழுந்தது. அப்போது அங்கு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தென்னமநாடு வல்லம் சாலையில் யாா் நிழற் குடை கட்டித் தருகிறோம் என்று உத்தரவாதம் கொடுக்கிறாா்களோ, அவா்களுக்கு எங்கள் வாக்குகளை கட்டாயம் அளிப்போம் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT