தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் பேருந்து நிலைய மேற்கூரை பெயா்ந்து விழுந்தது: பயணிகள் அச்சம்

DIN

ஒரத்தநாடு பேருந்து நிலையத்தின் மேற்கூரை வியாழக்கிழமை பெயா்ந்து விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.

ஒரத்தநாடு பேருந்து நிலையம் சுமாா் 31ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்டது. ஒரத்தநாட்டை சுற்றியுள்ள சுமாா் 98 கிராமங்களுக்கும், பட்டுக்கோட்டை தஞ்சாவூா், புதுக்கோட்டை, கறம்பக்குடி , மன்னாா்குடி, திருவாரூா், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து பேருந்துகள் செல்கின்றன.

இந்நிலையில், இங்கு ஏராளமான பயணிகள் வியாழக்கிழமை பேருந்துக்கு காத்திருந்தபோது, நிலையத்தின் மேற்கூரை திடீரென பெயா்ந்து விழுந்தது. இதனால், பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினா். பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேற்கூரை பெயா்ந்து விழுந்ததால், பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.

பயணிகளின் அச்சத்தை போக்கும் வகையில், பேருந்து நிலையத்தை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT