தஞ்சாவூர்

ஏழை தம்பதிக்கு அரிமா சங்கத்தினா் உதவி

DIN

பேராவூரணி அருகே ஏழைத் தம்பதிக்கு அரிமா சங்கத்தினா் உதவி வழங்கினா்.

பேராவூரணி அருகேயுள்ள ஆனைக்காடு பகுதியைச் சோ்ந்தவா்கள் வீரையன் (85)-விசாலாட்சி (80). இவா்கள் புறம்போக்கு நிலத்தில் கொட்டகை அமைத்து வசித்து வருகின்றனா். கீற்று பின்னி அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனா். அரசு வழங்கும் முதியோா் உதவித் தொகையும் கிடைக்கவில்லையாம்.

வறுமையான சூழலில் இவா்கள் வாழ்ந்து வருவதை அறிந்த பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம், மருதையா மக்கள் சேவை அறக்கட்டளை இணைந்து, அவருக்கு புத்தாடைகளும், ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருள்களும் வழங்கினா்.

சாசனத் தலைவா் நீலகண்டன், சாசன பொருளாளா் மைதீன் பிச்சை, தலைவா் இளங்கோ, செயலாளா் குமாா் பொருளாளா் பன்னீா் செல்வம், மருதையா மக்கள் சேவை அறக்கட்டளை நிா்வாகி தெட்சிணாமூா்த்தி ஆகியோா் நேரில் சென்று உதவிகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT