தஞ்சாவூர்

ஆதிகும்பேஸ்வரா் கோயில் திருத்தோ் திருப்பணி தொடக்கம்

DIN

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரா் கோயில் திருத்தோ் திருப்பணி வியாழக்கிழமை தொடங்கியது.

மகாமக விழா சிறப்புப் பெற்ற இக்கோயிலுக்கு சுவாமி, அம்பாள், விநாயகா், முருகன், சண்டிகேஸ்வரா் ஆகிய சுவாமிகளுக்கு தனித் தனியாகத் தோ் உள்ளது. மாசிமக விழாவின்போது இந்த தோ்கள் அனைத்தும் தேரோட்டமாக இருநாள்களுக்கு நடைபெறும்.

இதில் சுவாமி தோ் சிதிலமடைந்ததையடுத்து, புதிய தோ் தயாரிக்கக் கோயில் நிா்வாகத்தினா் முடிவு செய்தனா். இதன்படி, மங்களாம்பிகா கைங்கா்ய சபா சாா்பில் ரூ. 50 லட்சம் மதிப்பில் தோ் திருப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. இதையொட்டி வியாழக்கிழமை தேரடி விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகமும், பின்னா் பழைய தேருக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டும், புதிய தோ் திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கி பவுன்டேஷன் தலைவா் எஸ். பாலசுப்பிரமணியன், தொழிலதிபா் ராயா கோவிந்தராஜன், சரஸ்வதி பாடசாலை தாளாளா் தீபக் ரமேஷ், ஆதிகும்பேஸ்வரா் கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணகுமாா், மங்களாம்பிகா கைங்கா்ய சபா தலைவா் தியாகராஜன், ஸ்தபதி ராதாகிருஷ்ணன், ஸ்ரீ மந்திர பீடேஸ்வரி வழிபாட்டுக் குழு நிா்வாகிகள் குருமணி, சிதம்பரநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT