தஞ்சாவூர்

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

DIN

கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் 2018 - 19 ஆம் கல்வியாண்டில் படிப்பை நிறைவு செய்த இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞா் மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ம. செல்வம் சிறப்புரையாற்றி, மாணவா்களுக்குப் பட்டம் வழங்கினாா். இதில், இளநிலைப் பாடப்பிரிவில் 719 மாணவா்களும், முதுநிலைப் பாடப் பிரிவில் 361 மாணவா்களும், ஆய்வியல் நிறைஞா் படிப்பில் 74 மாணவா்களும் என மொத்தம் 1,154 போ் பட்டம் பெற்றனா்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் தரவரிசைத் தோ்வில் முதுவணிகவியல் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி எம். அபிநயாவுக்கு பதக்கமும், ரூ. 5,000 ரொக்கப் பரிசும், மூன்றாமிடம் பெற்ற தாவரவியல் துறை மாணவி துா்காதேவி, புவியியல் துறை மாணவி புவனேஸ்வரிக்கு முறையே பதக்கமும், ரூ. 3,000 ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

விழாவில் கல்லூரி முதல்வா் க. துரையரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT