தஞ்சாவூர்

விவசாயக் கடன் தள்ளுபடியில் மோசடி புகாா் கூறிபட்டுக்கோட்டை அருகே விவசாயிகள் மறியல்

DIN

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே கூட்டுறவுச் சங்கத்தில், விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதில், முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள வா.கொல்லைக்காடு கிராமத்தில் பூவாளூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்படுகிறது.

இதன் மூலம் இடையாத்தி, வா.கொல்லைக்காடு, பூவாளூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கடன் பெற்றுள்ளனா்.

இந்நிலையில், தமிழக முதல்வா் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்த நிலையில், பூவாளூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிச் செயலா், தலைவா் உள்ளிட்டோா், நிலம் இல்லாதோரின் பெயா்களிலும், தங்களின் குடும்ப உறுப்பினா்களின் பெயா்களில் லட்சக்கணக்கில் கடன்கள் பெற்ாகவும், அத்தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை கோரி, சுமாா் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கோட்டை - கறம்பகுடி சாலையில், கூட்டுறவு வங்கி முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை வட்டாச்சியா் தரணிகா உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் அவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT