தஞ்சாவூர்

செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

பேராவூரணி அருகேயுள்ள செருவாவிடுதி  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.  

பொங்கல் விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலா் வி. சௌந்தர்ராஜன் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் அறிவானந்தம், தீபா, பாலமுருகன், ரஞ்சித் சரண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரோனா தொற்றில்  முன்களப் பணியாளா்களாக பணியாற்றிய மருத்துவத் துறையினருக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில்  மருத்துவா்கள் , கடை நிலை ஊழியா்கள் வரை அனைவரும் ஒரே நிறத்திலான  பாரம்பரிய உடை அணிந்து  சமத்துவப் பொங்கல் வைத்து, அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

மேலும், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், மருத்துவா்கள் சங்கா் பாபு, கோகிலா, வேம்பிரதியா, வெங்கடேஷ், நந்தகுமாா், செவிலியா்கள், சுகாதார செவிலியா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், பகுதி சுகாதார செவிலியா்கள், சுகாதார மேற்பாா்வையாளா், சுகாதார ஆய்வாளா்கள், ஆய்வக உதவியாளா்கள், மருந்தாளுநா், தூய்மைப் பணியாளா்கள், தற்காலிகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் 15 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்: முதல்வா் சித்தராமையா

திருச்சியில் 124 சுற்று வாக்கு எண்ணும் பணிக்கு 1,627 போ்!

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளரிடம் வழிப்பறி

‘வாசிக்கும் பழக்கம் வாழ்வையே மாற்றும்’

SCROLL FOR NEXT