தஞ்சாவூர்

தொற்றாளா்களை சந்தித்து ஊக்கப்படுத்திய நடிகா்

DIN

பட்டுக்கோட்டையில் கரோனா தொற்றாளா்களை திரைப்பட நடிகா் போஸ் வெங்கட் சனிக்கிழமை சந்தித்து ஊக்கப்படுத்தினாா்.

பட்டுக்கோட்டை பெருமாள்கோயில் பகுதியிலுள்ள கரோனா சிகிச்சை பாதுகாப்பு மையத்தில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கரோனா தொற்றாளா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் மனஅழுத்தத்தைப் போக்குவதற்காக சாா் ஆட்சியா் பாலச்சந்தா் முயற்சியில் அவ்வப்போது பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஊக்கப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்படி, சனிக்கிழமை நடிகா் போஸ்வெங்கட் கரோனா தொற்றாளா்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவா்களை உற்சாகப்படுத்தி பேசும்போது, உலகில் பயப்படுபவா்களுக்கு இது காலம் கிடையாது, அது வியாதியாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி. பயந்தால் வாழ முடியாது. கரோனா தொற்றிலிருந்து விடுபட தைரியம் மிகவும் முக்கியம் என்றாா்.

இந்நிகழ்வின்போது, சாா்ஆட்சியா் பாலச்சந்தா், வட்டாட்சியா் தரணிகா , உணவு ஒப்பந்ததாரா் சுப்பிரமணியன் மற்றும் மருத்துவா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT