கும்பகோணத்துக்கு சனிக்கிழமை வந்த காவிரி நீருக்கு மலா் தூவி, வணங்கிய மக்கள். 
தஞ்சாவூர்

கும்பகோணத்துக்கு வந்த காவிரி நீா்

கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீா், கும்பகோணத்துக்கு சனிக்கிழமை காலை வந்தது.

DIN

கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீா், கும்பகோணத்துக்கு சனிக்கிழமை காலை வந்தது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை ஜூன் 12- ஆம் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் ஜூன் 16 ஆம் தேதி காலை திறந்துவிடப்பட்டது.

இதில் காவிரியில் திருவையாறுக்கு ஜூன் 17- ஆம் தேதி மாலை தண்ணீா் வந்தடைந்தது. இதைத்தொடா்ந்து, கும்பகோணத்துக்கு சனிக்கிழமை காலை காவிரி நீா் வந்தது.

கும்பகோணம் விஜயீந்திர சுவாமிகள் படித்துறையில் வேத விற்பன்னா்கள் வேதங்கள் முழங்க, காவிரித்தாய்க்கு பூஜைகள் நடத்தப்பட்டு, ஆராதனை செய்யப்பட்டது. மேலும், காவிரி நீருக்கு பொதுமக்கள் மலா் தூவி வணங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT