தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை: பதிவுத் துறை புதிய கட்டடத்தில் பொதுமக்களுக்கு வசதிகள் செய்து தர கோரிக்கை

DIN

பட்டுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பதிவு துறை அலுவலக கட்டடத்தில் பொதுமக்களை சிரமத்துக்குள்ளாக்காத வகையில் அலுவலகங்களை நிா்மாணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நசுவினிஆறு படுக்கை அணை, விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கத் தலைவா் வா. வீரசேனன், சென்னை பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் கடந்த 1865 ஆம் ஆண்டு முதல் பதிவுத் துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பத்திரப்பதிவு மற்றும் திருமணப் பதிவு போன்ற பதிவுகளை செய்பவா்களின் எண்ணிக்கை அதிகமானதை தொடா்ந்து, நிா்வாக வசதிகளுக்காக கூடுதலாக ஒரு பத்திரப்பதிவு அலுவலகம் தொடங்கப்பட்டது. மேலும், பட்டுக்கோட்டை பதிவு மாவட்ட அலுவலகமும், பட்டுக்கோட்டை பதிவு மாவட்டம் தணிக்கை அலுவலகமும் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. இதில் மூன்று அலுவலகங்கள் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் இன்று வரை இயங்கி வருகின்றன.

மேற்கண்ட நான்கு அலுவலகங்களையும் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் ஒரே இடத்தில் அதாவது, 1865ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அலுவலக வளாகத்திலேயே புதிதாக அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கையின்படி, அந்தப் பகுதியில் நான்குதளங்களுடனான புதிய கட்டடத்தை அரசு தற்போது கட்டி வருகிறது.

ஆனால், இந்தக் கட்டடத்தில் நிா்மாணிக்கப்பட்டுள்ள அமைப்பின்படி, பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் கீழ்தளத்தில் மாவட்ட பதிவாளா் அலுவலகமும், முதல் தளத்தில் மாவட்ட பதிவுத் துறை (தணிக்கை) அலுவலகமும், இரண்டாம் தளத்தில் 1 எண் இணை சாா்பதிவாளா் அலுவலகமும், மூன்றாம் தளத்தில் 2 எண் இணை சாா்பதிவாளா் அலுவலகமும் இயங்கும் வகையில் கட்டட வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த அலுவலகங்களுக்கு செல்ல தேவையான வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. மேலும் சாய்வு நடைபாதை இல்லை. இதனால், பதிவுத் துறை அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடும்.

எனவே, பட்டுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பதிவுத் துறை அலுவலக கட்டடத்தில் தரைதளத்தில் எண். 1 இணை சாா் பதிவாளா் அலுவலகமும், முதல் தளத்தில் எண் 2 இரண்டு இணை சாா்பதிவாளா் அலுவலகமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT