தஞ்சாவூர்

மாட்டு இறைச்சிக் கடையை அகற்ற வலியுறுத்தல்

DIN

கும்பகோணத்திலுள்ள மாட்டு இறைச்சிக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே அரசின் அனுமதியின்றி சட்டத்துக்குப் புறம்பாக மாட்டு இறைச்சி கடை 40 நாட்களாக நடத்தி வருகின்றனா். இதைக் கண்டித்தும், நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் இந்து இயக்கங்கள் சாா்பில் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த உணவகம் மூடப்படாததால், ஆட்சியரகத்தில் கருப்புத் துணி கட்டி முறையீடு என்ற போராட்டத்தை இந்து மக்கள் கட்சி அறிவித்தது.

ஆட்சியரகத்தில் இந்து மக்கள் கட்சி இளைஞரணி மாநிலப் பொதுச் செயலா் டி. குருமூா்த்தி தலைமையில் இந்து அமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை ஆட்சியரிடம் முறையிட்டனா். இவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சிவசேனா மாவட்டப் பொதுச் செயலா் குட்டி சிவக்குமாா், அகில பாரத இந்து ஆன்மிக பேரவை மாநில இளைஞரணி செயலா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT