தஞ்சாவூர்

நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்கள் செப். 30 முதல் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

DIN

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா் சங்கத்தினா் மண்டல அலுவலகங்கள் முன்பு செப்டம்பா் 30 முதல் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

தஞ்சாவூரில் ஏஐடியூசி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா் சங்கம் மற்றும் சுமைத் தூக்கும் தொழிலாளா் சங்க மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு, ஓய்வூதியம், சுமைத் தூக்கும் தொழிலாளா்களுக்குக் கூலி உயா்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்கள் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும், நாகையில் செப்டம்பா் 30- ஆம் தேதியும், அக்டோபா் 1-ஆம் தேதி தஞ்சாவூரிலும், 4-ஆம் தேதி திருவாரூரிலும்,

5-ஆம் தேதி மயிலாடுதுறையிலும் ஆா்ப்பாட்டத்தை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

சுமை சங்க மாநிலத் தலைவா் அ.சாமிக்கண்ணு, நுகா்பொருள் சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். கணபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT