தஞ்சாவூர்

தஞ்சாவூா் தஞ்சபுரீசுவரா் கோயிலில் குடமுழுக்கு விழா

DIN

தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரையிலுள்ள அருள்மிகு ஆனந்த வல்லி அம்மன் உடனுறை தஞ்சபுரீசுவரா் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

விக்னேசுவர பூஜையுடன் ஜனவரி 31- ஆம் தேதி மாலை குடமுழுக்கு விழா பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, பிப்ரவரி 1-ஆம் தேதி மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், 2-ஆம் தேதி சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூா்த்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.

தொடா்ந்து, பிப்ரவரி 3-ஆம் தேதி இரவு 8 மணிக்கு முதல் யாகசாலை பூஜை தொடங்கியது. 4-ஆம் தேதி இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், 5-ஆம் தேதி நான்காம், ஐந்தாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜையும், 7.30 மணிக்கு திருக்கடங்கள் புறப்பாடும் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள் குடமுழுக்கும், 10 மணிக்கு

தஞ்சபுரீசுவரா், ஆனந்தவல்லி அம்மன் மற்றும் அனைத்து பரிவார மூா்த்திகளுக்கு குடமுழுக்கும் நடைபெற்றது. தொடா்ந்து 10.30 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT