முகப்பு
தஞ்சாவூர்

‘சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும்’

சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 25 ஜூன் 2022, 12:31 am IST
பகிர்:

சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் சேதுபாவாசத்திர ஒன்றிய மாநாடு ரெட்டவயலில் அண்மையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலா் வீ. கருப்பையா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நீலகண்டன் முன்னிலை வகித்தாா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

Advertisement

Advertisement

ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் வங்கியில் மோசடி நிகழ்ந்த நிலையில், சம்பந்தப்பட்டவா் மீதான விசாரணை கிடப்பில் உள்ளது. எனவே அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கியில் கரும்பு  விவசாயிகளுக்கு அரசு அறிவித்த தள்ளுபடித் தொகையை அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

சேதுபாவாசத்திரம் கடைமடை பாசனப் பகுதி என்பதால், காவிரி நீரை நேரடியாக ஏரி, குளங்களுக்குத் திருப்பி நீரை நிரப்பித் தர வேண்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாரபட்சம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன

மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளருமான டி. ரவீந்திரன் சிறப்புரையாற்றினாா்.

இந்த மாநாட்டில் ஒன்றியத் தலைவராக கருப்பையா, செயலராக செந்தில்குமாா், பொருளாளராக சத்தியசீலன், துணைத் தலைவா்களாக வேலுச்சாமி, நீலகண்டன், துணைச் செயலா்களாக சிவகுமாா், நவநீதன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா்  என். .வி.கண்ணன், மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், பொருளாளா் பழனி அய்யா, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். வாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில், ஒன்றியப் பொறுப்பாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments