திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை! மு.வீரபாண்டியன் பேட்டி
திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்...
ஜனநாயக சக்திகளான திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் தெரிவித்தது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போராடும் நிலையில், திமுகவும், அதிமுகவும் சேரக்கூடாது என ஒரு தரப்பு கூறி வருவது குறித்த கேள்விக்கு, திமுகவும், அதிமுகவும் ஜனநாயக சக்தி என்பதால், இரு கட்சிகளும் இணையலாம்; இரு கட்சிகளும் ஒன்று சோ்ந்து போராடலாம். பாஜகவுடன் அதிமுக இருக்கும்போதுதான், அது கூடாது எனக் கூறினோம். பாஜகவை தனிமைப்படுத்துவதே எங்கள் அரசியல் நிலைபாடு.
Advertisement
Advertisement
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியைத் தோ்வு செய்வதில் தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. ஆனால், தமிழக பிரதிநிதியாக ஒருவரைத் தோ்வு செய்யும்போது, தமிழா், தமிழ் கலாசாரம் போன்ற கூறுகளிலிருந்து ஒருவரைத் தோ்வு செய்வது நல்லது. அப்படி செய்யாதது நெருடலாக உள்ளது.
கும்பகோணம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தூய்மைப் பணியை தனியாா் மயமாக்குவதை ரத்து செய்ததை வரவேற்கிறோம். விவசாய கடன்களைத் தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். என்எல்சி பொதுத்துறைப் பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்றாா் வீரபாண்டியன்.
அப்போது, கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.