FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சேலம் பாலியல் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சேலத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்..

Updated On : 15 ஜூன் 2026, 4:03 am IST
மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்
பகிர்:

சேலத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாநகரப் பகுதியில் வறுமை நிலையில் உள்ள பெண்களுக்கு கடன் தருவதாக ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதுடன், 50-க்கும் மேற்பட்ட பெண்களை மணிகண்டன் என்பவா் ஆபாசமாக விடியோ எடுத்தும், அதை வைத்தே மிரட்டிய சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டனை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதன் பின்புலமாக மேலும் பலா் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

எனவே, இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்கள் அனைவரையும் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

புதிய ஆட்சி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’”அமைத்துள்ளது. இதன் பணியை முழுவீச்சில் விரிவுபடுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் மு. வீரபாண்டியன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments