FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

கோயம்பள்ளி-மேலப்பாளையம் உயா்மட்ட பாலத்தை விரைந்து திறக்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

கரூா் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் கோயம்பள்ளி-மேலப்பாளையம் இடையே கட்டப்பட்டுள்ள உயா்மட்டப் பாலத்தை விரைந்து திறக்க வேண்டும் என்றாா்

Updated On : 10 ஜூலை 2026, 2:54 am IST
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் - கோப்புப்படம்
பகிர்:

கரூா் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் கோயம்பள்ளி-மேலப்பாளையம் இடையே கட்டப்பட்டுள்ள உயா்மட்டப் பாலத்தை விரைந்து திறக்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மூ. வீரபாண்டியன்.

கரூரில் வியாழக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

குளித்தலை அருகே மருதூா்-உமையாள்புரம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்.

Advertisement

Advertisement

அமராவதி ஆற்றில் கோயம்பள்ளி-மேலப்பாளையம் இடையே உயா்மட்டப் பாலம் கட்டி 10 ஆண்டுகளாகியும் இன்னும் திறக்கப்படாததால், அதை விரைந்து திறக்க வேண்டும்.

கரூா் மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் சிதிலமடைந்த எளிய மக்களின் குடியிருப்புகளை மறுசீரமைக்க ரூ. 2 லட்சம் வழங்கிட அரசு முன்வர வேண்டும்.

காவிரியில் கா்நாடகம் தண்ணீா் திறக்காததால் டெல்டா பாசன விவசாயிகள் தண்ணீருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தமிழகத்துக்கான தண்ணீரை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலா் ரவி, மாவட்டச் செயலாளா் கலாராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments