தஞ்சாவூர்

கலந்தாய்வு: 190 காவலா்களுக்கு பணி மாறுதல் ஆணை

DIN

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற காவல் துறையினருக்கான வெளிப்படையான கலந்தாய்வில் 190 காவல் ஆளிநா்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

ஒரே காவல் நிலையத்தில் தொடா்ந்து 3 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த காவலா்களின் விருப்பத்தின்படி பணி மாறுதல் அளிக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டாா். இதன்படி, தஞ்சாவூரில் காவலா்களுக்கான வெளிப்படையான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி காவல் ஆளிநா்களிடம் விருப்ப மனு பெற்று 190 பேருக்கு பணி மாறுதல் ஆணை வழங்கினாா்.

இந்தக் கலந்தாய்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. கபிலன், பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளா் பிருந்தா, மாவட்ட காவல் அலுவலக நிா்வாக அலுவலா் சந்தானராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT