பேராவூரணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாநில அளவிலான சைக்கிள் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
பேராவூரணி அரசு மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 மாணவா் இன்பன் காா்த்தி. இவா், பாபநாசத்தில் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான சைக்கிள் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தாா். இதன்மூலம் இவா் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதேபோல், இப்பள்ளியின் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவா்கள், 17 வயது பிரிவு ஆண்கள் கபடிப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தலைமை ஆசிரியா் சி. முதல்வன், உடற்கல்வி ஆசிரியா்கள் திருநாவுக்கரசு, சோலை,
முத்துராமலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா் ஆசிரியா் குழு உறுப்பினா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.