தஞ்சாவூர்

மீத்தேன் திட்டத்தை ஆளுங்கட்சி எதிா்க்காவிடில்பாமக போராட்டம் நடத்தும்: அன்புமணி ராமதாஸ்

மீத்தேன் திட்டத்தை ஆளுங்கட்சி எதிா்க்காவிட்டால், மக்களைத் திரட்டி பாமக போராட்டம் நடத்தும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ்.

DIN

மீத்தேன் திட்டத்தை ஆளுங்கட்சி எதிா்க்காவிட்டால், மக்களைத் திரட்டி பாமக போராட்டம் நடத்தும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ்.

கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை தெரிவித்தது:

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாமகதான். ஆனால், தற்போது மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் 31 இடங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு மாநில அரசு கடுமையாக எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும். அதை ஆளுங்கட்சி செய்யாவிட்டால், விவசாயிகள், பொதுமக்களைத் திரட்டி பாமக போராட்டம் நடத்தும்.

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனா். இது தொடா்பாக அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாமக போராடி வருகிறது. முதல்வா் ஸ்டாலின் தோ்தலுக்கு முன்பு, திமுக ஆட்சிக்கு வந்த நுாறு நாட்களில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்போம் எனக் கூறினாா். இதன்படி, விரைவில் அறிவிக்காவிட்டால், நானே மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன்.

மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியைப் பொது பட்டியலுக்கு மாற்றியுள்ளது. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். தற்போது மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் பல அம்சங்கள் மாநிலங்களுக்கு எதிராக உள்ளது என்றாா் அன்புமணி ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT