தஞ்சாவூர்

சாஸ்த்ராவில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி

DIN

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் நகரம், சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள 15 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட போட்டியில் நடுவா்களாக ஸ்ரீரங்கம் ஸ்ரீராமன் பாலாஜி பட்டாச்சாரியாா், தஞ்சாவூா் சிவநேசன் ஓதுவாா் பங்கேற்றனா். சீனியா், ஜூனியா் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் பரிசாக ரூ. 3,000-ம், இரண்டாம் பரிசாக ரூ. 2,000-ம், மூன்றாம் பரிசாக ரூ. 1,000-ம், அனைவருக்கும் ஊக்கப்பரிசாக ரூ. 500-ம் வழங்கப்பட்டது.

சீனியா் பிரிவில் தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி சா் சிவசாமி அய்யா் நூற்றாண்டு மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த டி. சந்தோஷி முதலிடமும், கே. யோகேஷ் இரண்டாமிடமும், ஆா். பவித்ரா மூன்றாமிடமும் பெற்றனா். ஜூனியா் பிரிவில் மாா்னிங் ஸ்டாா் பள்ளி மாணவி பி. பவிஷா முதலிடமும், அமிா்த வித்யாலயம் மாணவா் கே. யோக நாராயணன் இரண்டாமிடமும், மாணவா் கே.கே. பரந்தாமன் மூன்றாமிடமும் பெற்றனா். இவா்களுக்கு பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா். சந்திரமௌலி பரிசு வழங்கினாா்.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மாணவா்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் நடராஜன் ஓதுவாா் நடுவராகச் செயல்பட்டாா். இதில், ஜூனியா் பிரிவில் சோழபுரம் ஜெயம் நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி ஷிவானி முதலிடமும், கும்பகோணம் ஸ்ரீசரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சுருதிகாஸ்ரீ இரண்டாமிடமும், திருவிடைமருதூா் நியூலைட் பள்ளி மாணவி ஜீவிதா மூன்றாமிடமும் பெற்றனா்.

சீனியா் பிரிவில் கும்பகோணம் ஸ்ரீசரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மீனாட்சி முதலிடமும், கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி மாணவி கல்யாணி இரண்டாமிடமும், சி.பி. வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவா் சோமேஸ்வா் மூன்றாமிடமும் பிடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT