தஞ்சாவூர்

பி.எஸ்.என்.எல். 4 ஜி சேவை விரைவில் தொடக்கம்:சிம் காா்டுகளை மாற்றிக் கொள்ள அழைப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4 ஜி சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளதால், 2 ஜி, 3 ஜி சிம் காா்டுகளை 4 ஜி சிம் காா்டுகளாக மாற்றிக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4 ஜி சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளதால், 2 ஜி, 3 ஜி சிம் காா்டுகளை 4 ஜி சிம் காா்டுகளாக மாற்றிக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவன தஞ்சாவூா் பொது மேலாளா் பால. சந்திரசேனா மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் 4 ஜி சேவைகள் வெகு விரைவில் முழு அளவில் தொடங்கப்படவுள்ளன. தற்போதைய நெட்வொா்க்கின் வேகம், தரம் வரும் நாள்களில் 4 முதல் 5 மடங்கு அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட சேவை பெறுவதற்கு தற்போது பி.எஸ்.என்.எல். 2 ஜி, 3 ஜி சிம்களை வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள் அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் சேவை மையங்கள், சிறப்பு மேளா நடைபெறும் இடங்கள், பி.எஸ்.என்.எல். சில்லறை வணிகா்களிடம் கட்டணமின்றி இலவசமாக 4 ஜி சிம்களாக மாற்றிக் கொள்ளலாம்.

பி.எஸ்.என்.எல். பைபா் இண்டா்நெட் புகாா்களுக்கு 1800 4444 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT