தஞ்சாவூர்

தொழிலாளா்களுக்கு நாளை விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் செய்யலாம்

Din

தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்குப் பதிவு நாளான வெள்ளிக்கிழமை தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் செய்யலாம்.

இது குறித்து தொழிலாளா் அலுவலகம் (அமலாக்கம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்களிக்கும் வகையில் அனைத்து கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், ஐ.டி., பிபிஓ, பொது, தனியாா் துறை நிறுவனங்கள், தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளா்கள் என அனைத்து தொழிலாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

இதை உறுதி செய்ய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை தொடா்பாக புகாா்கள் இருந்தால் தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தி. கமலாவை 99526 39441, தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆய்வா்கள் பு. சம்பத்தை 8526768823, அ. கலைமதியை 9976975149 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம்.

அமித் ஷாவால் பிரதமராக முடியாது! -தில்லி முதல்வர் கேஜரிவால்

ரிஷபம்

மேஷம்

ஆம்பூரில் ஹவாலா பணம் ரூ.17 லட்சம் பறிமுதல்?

விடாமுயற்சி வெளியீடு அப்டேட்!

SCROLL FOR NEXT