முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி அருகே பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:38 am IST
பகிர்:

பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டடங்களை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி, கலைஞா் நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குழந்தை நேயப் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  ரூ. 29.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடத்தையும், பேராவூரணி ஒன்றியம், கூப்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடத்தையும் தமிழக முதல்வா் திறந்து வைத்ததாா். இதையடுத்து புதிய வகுப்பறை கட்டடங்களில் சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் குத்துவிளக்கேற்றினாா். நிகழ்ச்சியில் ,  சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவா் மு.கி.முத்துமாணிக்கம், திமுக மாவட்ட அவைத் தலைவா் சுப.சேகா்,  ஒன்றியச் செயலாளா்கள் க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினா் அ. அப்துல் மஜீத், பேரூராட்சி தலைவா் சாந்தி சேகா், நகரச் செயலாளா் சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.