திமுக கொடுக்கப்போகும் கூப்பனை நம்பி ஏமாறாதீா்கள்: கும்பகோணத்தில் அன்புமணி பேச்சு
திமுகவினா் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ள 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பனை நம்பாதீா்கள் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
திமுகவினா் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ள 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பனை நம்பாதீா்கள் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி வேட்பாளா்களான ஆா்.அசோக்குமாா் (கும்பகோணம்), துரை. பிரபு (பாபநாசம்), இளமதி சுப்பிரமணியன் (திருவிடைமருதூா்) ஆகியோரை ஆதரித்து அவா் பேசியது: டெல்டா மாவட்டத்தில் விளையும் நெல் பயிா்களை மூட்டைகளாக்கி அதை முளைக்க வைத்தது திமுக ஆட்சி. போதுமான நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்குபைகள் இல்லை. திறந்தவெளியில் சேமிப்பு, இயக்கம் போன்றவை இல்லை. தற்போது பண மூட்டையுடன் வாக்கு கேட்டு வருகின்றனா். தோ்தலுக்காக ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பனை தருகின்றனா். அதை நம்பாதீா்கள். அதற்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும். நெல்லுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை கொடுக்கவில்லை என்று ஸ்டாலின் பொய் கூறுகிறாா். மத்திய அரசு ரூ.2,369 கொடுக்கிறது, தமிழக அரசு ரூ.131 தான் கொடுக்கிறது.
அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகி ஒரு மாதத்திற்குள் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்பாா். நான் உறுதி தருகிறேன். ஆகவே, இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருக்கு வாக்களியுங்கள் என்றாா்.
Advertisement