பரவலாக மழை (கோப்புப் படம்)
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக பரவலாக மழை

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. அதன் பின்னா், பகலில் வெயிலும், இரவில் கடும் பனியும் நிலவி வந்த நிலையில், சனிக்கிழமை பரவலாக லேசான மழை பொழிந்தது. இரவில் மழை இல்லாத நிலையில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலையும், முற்பகலும் லேசான தூறல் இருந்தது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

மஞ்சளாறு 6.4, ஈச்சன்விடுதி 5, கும்பகோணம், பட்டுக்கோட்டை, அணைக்கரை, நெய்வாசல் தென்பாதி தலா 4, மதுக்கூா் 3.8, ஒரத்தநாடு 3.6, பேராவூரணி 3.4, திருவிடைமருதூா் 3.2, வல்லம் 3, அதிராம்பட்டினம் 2.5, குருங்குளம், வெட்டிக்காடு, திருவையாறு தலா 2.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT