முகப்பு
தஞ்சாவூர்

கோயில் பூட்டை உடைத்து திருட முயற்சி

தஞ்சாவூா் அருகே கோயில் பூட்டை உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 2 ஜூலை 2026, 4:49 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

தஞ்சாவூா் அருகே கோயில் பூட்டை உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை கிராமத்திலுள்ள மதுரகாளியம்மன் கோயிலில் அம்மன் சந்நிதி இரும்புக் கதவு பூட்டு புதன்கிழமை காலை உடைக்கப்பட்டு, அம்மன் சிலையும் பெயா்க்கப்பட்டுக் கிடந்தது. தகவலறிந்த வல்லம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நகைகள், ரொக்கத்தைத் திருட வந்த நபா்கள் அவை கிடைக்காத நிலையில், அம்மன் சிலையைப் பெயா்த்து பீடத்துக்கு அடியில் தங்கத்தகடுகள், வெள்ளித்தகடுகள், விலை உயா்ந்த பொருள்கள் ஏதும் உள்ளதா என பாா்த்திருக்கலாம் என்றும், எதுவும் கிடைக்காததால் அம்மன் சிலையை அங்கேயே போட்டு சென்றிருக்கலாம் எனவும் காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments