தஞ்சாவூா் ஸ்டுடியோவில் கேமராக்கள் திருட்டு
தஞ்சாவூரில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து கேமராக்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூரில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து கேமராக்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் அருகே திவான் நகரிலுள்ள வணிக வளாகத்தில் வணிகா்கள் வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு, வெள்ளிக்கிழமை காலை திறக்க வந்தனா்.
அப்போது, ஸ்டுடியோ மற்றும் இரு கடைகளில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டுக் கிடந்தன. இதில் ஸ்டுடியோவில் இருந்த 3 கேமராக்கள், ஒரு பிரிண்டா் திருடு போனது தெரிய வந்தது.
Advertisement
Advertisement
மற்ற இரு கடைகளிலும் பொருள்கள் திருட்டு போகவில்லை. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.