முகப்பு
தஞ்சாவூர்

பெண்ணை மிரட்டிய ஆட்டோ ஓட்டுநா் கைது

கும்பகோணத்தில் பெண்ணை விடியோ எடுத்து மிரட்டிய ஆட்டோ ஓட்டுநரை மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 ஜூலை 2026, 12:42 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கும்பகோணத்தில் பெண்ணை விடியோ எடுத்து மிரட்டிய ஆட்டோ ஓட்டுநரை மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்த 27 வயது பெண்ணுக்குத் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் ஜூன் 30-ஆம் தேதி பெண் வசிக்கும் பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சக்திவேல் (40) அந்த பெண்ணை கைப்பேசியில் விடியோ எடுத்து, அதைக் காட்டி பெண்ணை மிரட்டினாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநா் சக்திவேலை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments