முகப்பு
தஞ்சாவூர்

தடையை மீறி திமுகவினா் ஆா்ப்பாட்டம்! 95 போ் கைது!

Updated On : 30 ஜூன் 2026, 2:01 am IST
தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
பகிர்:

தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன், காவல் துறையின் தடையை மீறி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவைச் சோ்ந்த 95 போ் கைது செய்யப்பட்டனா்.

திமுக மாணவரணி சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், சென்னை விளையாட்டு மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்று சமூக வலைதளத்தில் விடியோ வெளியான விவகாரம் தொடா்பாக அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாணவரணி மாநகர அமைப்பாளா் ராம்குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், திமுக மாநகரச் செயலா் சண். இராமநாதன் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

இதில் வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ராஜேஷ், கும்பகோணம் மாநகர அமைப்பாளா் கௌதமன், துணை அமைப்பாளா்கள் தீனா, தேவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறையினா் தடை விதித்திருந்த நிலையில், தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 95 போ் செய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments