பெல் நிறுவனத்தில் பொதுத்துறை நாள் கொண்டாட்டம்
திருச்சி பெல் நிறுவனத்தில் பொதுத் துறை நாள் கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சி பெல் நிறுவனத்தில் பொதுத் துறை நாள் கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிறுவனத்தின் நிர்வாகக் கட்டடத்தில் நடைபெற்ற விழாவில், திருச்சி பெல், திருமயம் மின்னாலைக் குழாய்கள் பிரிவு மற்றும் சென்னை குழாய்கள் மையச் செயல் இயக்குநர் ஆர். ராஜா மனோகர் பேசுகையில், பொதுத்துறை நிறுவனங்களின் சாதனைகள், சமூக, பொருளாதாரப் பங்களிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் வாய்ப்பாக அமைந்துள்ளது.
சவால்கள் நிறைந்த வணிகச்சூழலை சமாளித்திடவும், தலைமைப் பண்பை தொடர்ந்து தக்க வைக்கவும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரும் அவர்கள் பங்களிப்பை மேம்படுத்துவது அவசியமானது என்றார். நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு ஆர். ராஜா மனோகர் பரிசு வழங்கினார்.
முன்னதாக, மனிதவளம் மற்றும் மருத்துவத்துக்கான கூடுதல் பொது மேலாளர் ஏ.எஸ் . சமது வரவேற்றார். மனித வளத்துறை முதுநிலைத் துணைப் பொது மேலாளர் ஆர். ஆனந்தகுமார் நன்றி கூறினார்.