முகப்பு
திருச்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மே 2 முதல் கோடைகால சிறப்புப் பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில்  பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைகால  சிறப்புப் பயிற்சிகள் மே 2 ஆம் தேதி தொடங்குகின்றன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில்  பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைகால  சிறப்புப் பயிற்சிகள் மே 2 ஆம் தேதி தொடங்குகின்றன.
இதுகுறித்து  திருச்சி மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவகுமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கோடைகாலத்தை மாணவ, மாணவிகள் பயனுள்ளதாக ஆக்கும் வகையில் வாசகர் வட்டத்துடன் இணைந்து சிறப்பு பயிற்சிகளை மாவட்ட மைய நூலகம் அளிக்க உள்ளது. 
குழந்தைகளுக்கான ஓரிகாமி, பாப்ஆப் கலைவடிவப் பயிற்சி மற்றும் கண்காட்சி மே 2,3 தேதிகளில் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது.  அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் கே. அருணாபாலனின்  ஓரிகாமி படைப்புகளின் கண்காட்சியும் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியைத் தொடர்ந்து  மே 5, 6, 7 தேதிகளில் ஓரிகாமி குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெறும். இந்த பயிற்சிக்குத் தேவையான சார்ட், ஏ 3 அளவுடைய  இருபக்க வண்ண பேப்பர்,  பெவிக்கால், கத்திரிக்கோல், கட்டர், ஸ்கெட்ச் பேனா போன்றவைற்றை மாணவ, மாணவிகளே எடுத்து வர வேண்டும்.
மூன்று நாள் பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் தங்கள்பெயரை மாவட்ட மைய நூலகத் தொலைபேசி எண்ணில் 0431-2702242  தொடர்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →