திருச்சி

திருட்டு வழக்கில் போலீஸார் தாக்கியதாக 5 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி

DIN

திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார் தாக்கியதாக 5 பெண்கள் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
முசிறி காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா மற்றும் 3 போலீஸார் துறையூர் அருகே ஜம்புநாதபுரம் கிராமம் குறவர் தெருவுக்கு வியாழக்கிழமை சென்றனர். அங்கு மூங்கில் கூடை முறம் செய்து விற்கும் சரத்குமார் மனைவி சங்கீதா(22), சுந்தராஜ் மனைவி சித்ரா(45), மருதை மனைவி வள்ளி(45), சிவக்குமார் மனைவி ஜெயக்கொடி(25), கணபதி மனைவி ஜீவா(45) ஆகியோரை ஆய்வாளர் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி முசிறி காவல் நிலையம் அழைத்துச் சென்று பதிவான திருட்டு வழக்கு தொடர்பாக அடித்து விசாரணை செய்த போலீஸார், ஒரு கட்டத்தில் திருடியதாக ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை இரவு அவர்களை விடுவித்த முசிறி போலீஸார், தாங்கள் தாக்கியதாக வெளியே சொன்னால் பாலியல் வழக்கு போட்டுவிடுவதாக மிரட்டி அனுப்பினராம். ஜெம்புநாதபுரத்தில் சொந்த வீட்டில் வசிக்கும் தங்களை முசிறி காவல் ஆய்வாளர் சந்தேக வழக்கில் கைது செய்து தாக்கியது அதிர்ச்சியாக உள்ளது என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT