திருச்சி

கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யாதோர் 22 லட்சம் பேர்: ஏஐடியூசி தொழிற்சங்க மாநில தலைவர் பேட்டி

DIN

கட்டுமான தொழிலாளர் நலவாரியம் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இன்னும் 22 லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யவில்லை என தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் கே.ரவி தெரிவித்துள்ளார்.
இச் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் உறையூர், ஜவுளி உற்பத்தியாளர் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் கே. ரவி செய்தியாளர்களிடம் கூறியது:
சுமார் 24 ஆண்டு கால போராட்டத்துக்குப் பின்னர் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. என்றாலும் அதன் விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருப்பதாலும், தொழிற்சங்கங்களை அனுமதிக்க மறுப்பதாலும், மொத்தமுள்ள 50 லட்சம் பேரில் 28 லட்சம் பேர்தான் பதிவு செய்துள்ளனர்.  சுமார் 22 லட்சம் உறுப்பினர்கள் இது வரையில் நல வாரியத்தில் தங்களை பதிவு செய்துகொள்ளவே இல்லை. மேலும் பதிவு செய்தவர்களில் 10 லட்சம் பேர் பதிவை புதுப்பிக்கவில்லை.  எனவே சங்க விதிமுறைகளையும் பதிவுகளின்போது மேற்கொள்ளப்படும் கால தாமதத்தையும் அரசு அகற்றுவதுடன் நலவாரியத்தின் செயல்பாட்டையும் தீவிரப் படுத்தவேண்டும்.
இது தொடர்பாக தமிழகம் முழுவதும் தொழிலாளர்களை சந்தித்து, நலவாரியத்தின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்து வருகிறோம்.
விபத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்தால் மட்டுமே இழப்பீட்டுத் தொகை என விதியுள்ளது. இதனால் விபத்தினால் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைப்பதில்லை. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்றார். 
அப்போது  துணைத்தலைவர்கள் சுரேஷ் (திருச்சி), கவிதா, சாந்தி, மாநிலப் பொருளாளர் முருகன் (மதுரை) மாநிலச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், முனுசாமி, பாலன், தில்லைவனம், சேது, துரைசாமி,சின்னசாமி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT