திருச்சி

துப்புரவுத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் 47ஆவது வார்டில் சுகாதாரகேடு ஏற்படும் அபாயம்

DIN

திருச்சி மாநகராட்சி 47-ஆவது வார்டு பகுதிகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரகேடு ஏற்படும் நிலை உள்ளது.
திருச்சி மாநகராட்சி 47ஆவது வார்டில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.  இப்பகுதியில்  மாநகராட்சி பள்ளி,  தாய் சேய் நல ஆரம்ப சுகாதார நிலையம்,  கோயில்கள்,  சர்ச், மசூதி ஆகியவைகளும் உள்ளன. இப்பகுதியில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேற முடியாத நிலை  உள்ளது. இதனால் வீடுகளைச் சுற்றிலும் கழிவுநீர் சூழ்ந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள குடிநீர்க் குழாய்களையும் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் கூறுகையில்,   தூய்மை இந்தியா திட்டத்துக்காக துப்புரவுத் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டு விடுவதால், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT