திருச்சி

மானியத்துடன் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசு மானியத்துடன் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் கூறியது: திருச்சி மாநகராட்சியில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தனிநபர் கழிப்பறைகள் மானிய உதவியுடன் கட்டித்தரப்படுகிறது. பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள பொதுமக்களுக்கு இத்திட்டத்தில் கழிப்பறை கட்டித்தரப்படும். இட வசதி உள்ள பொதுமக்கள் திருச்சி மாநகராட்சியின் 4 கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வழங்கலாம். திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகத்திலும் விண்ணப்பங்களை வழங்கலாம். இத்திட்டத்தில், மத்திய அரசு மானியமாக ரூ.4 ஆயிரம், மாநில அரசு மானியமாக ரூ.2 ஆயிரம், மாநகராட்சி பங்களிப்பு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.4 ஆயிரம் சேர்த்து ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டித்தரப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் ஆணையர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT