ஸ்ரீரங்கத்தில் இந்து மகா சபையினர் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீரங்கம் கோயிலில் கன்னியாஸ்திரிகளை அனுமதித்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மகா சபையினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
ஸ்ரீரங்கம் கோயிலில் கன்னியாஸ்திரிகளை அனுமதித்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மகா சபையினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மகா சபை தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். கோயிலுக்குள் கன்னியாஸ்திரிகளை அனுமதித்த நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழுக்கங்கள் எழுப்பினர்.