மக்கள் குறைகேட்பு நாளில் 428 மனுக்கள்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 428 மனுக்கள் அளிக்கப்பட்டன.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 428 மனுக்கள் அளிக்கப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, சாதி சான்று, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகைகள், வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, பொதுமக்கள் அளித்த 428 மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 13 பேருக்கு தலா ரூ.22,500 வீதம் இயற்கை மரண உதவித் தொகை, 4 பேருக்கு தலா ரூ.1,02,500 வீதம் விபத்து நிவாரணத் தொகை, ஒருவருக்கு விபத்து நிவாரணத் தொகையாக ரூ.1 லட்சம் என மொத்தமாக ரூ. 8.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. பஷீர், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.